ராப்பொழுது…-தஞ்சிகுமார்-காலையிலேயே கனன்று வீசிய கத்திரி வெயிலின் தீட்சண்யம் அப்படி ஒன்றும் வெக்கையாயில்லை வீராயிக்கு. பட்டியிலிருந்த ஆடுகளை வெளியே வலுக்கட்டாயமாக துரத்தி விட்டு தரையில் இருந்த ஆட்டு புழுக்கை மற்றும் செத்தைகளை வழக்கம் போல மொறத்தால் எடுத்து எட்டி மரத்தின் அருகிலிருந்த உரக்குழியில் கடாசினாள். தரையில் அங்குமிங்கும் வழிந்தோடும் ஆட்டு மூத்திரத்தை கட்ட தொடப்பத்தால் சுத்தப் படுத்திவிட்டு வெளியே வரும் போது ‘ம்மே ம்மே’ என்று இரை வேண்டிய ஆடுகளின் கூப்பாடு.பேக்கடைக்கு சென்று ராவு சாப்பிட்டு விட்டு தண்ணீரில் ஊறவைத்த சோத்து பல்லா, கொழம்பு சட்டி, கூழ் பானை, அகப்பை மற்றும் சாப்பாட்டு அலுமினியக் கிண்ணியை சாம்பலும் வைக்கோலுமாக போட்டு அழுந்த தேய்த்து சுத்தமாக கழுவி எதிரிலிருந்த பாறைக் கல்லில் கவித்து காய வைத்தாள்.காத தூரத்தில் இருந்த கெணத்தில் தண்ணீ சேந்தி வந்து பானையை ரொப்பினாள். பிறகு குடிசைக்குள் வந்தவள் மேலான்டை ஓரத்தில் ஈச்சம் பாயின் மேல் கிழிந்த பொடவையின் விரிப்பில் நீர் பட்ட கம்பளி பூச்சாக தேகம் சுருண்டு இருமலும் பொருமலாக கிடந்த குப்பத்தா கிழவியைப் பதுவுசாக சொல்லி எழுப்பி கைத்தாங்கலாக கொல்லைக்கு அழைத்து சென்று மறுபடி கூட்டி வந்து திண்ணை கட்டையில் உட்கார வைத்தாள். வெளியே வாசலில் சாணி தெளித்து கம்பி கோலம் போட்டாள். கைக் கால் அலம்பி கிழவிக்கு ஆகாரமாக சட்டியிலிருந்த கம்பங் கூழ் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாயை வாயிலே ஊட்டிய பிறகு பாட்டி தலைமுடியையும், சீலையையும் கொஞ்சம் சரிப்படுத்தினாள். ராவு சாப்பிட்டு மிச்சமிருந்த பழஞ்சோற்றுடன் பச்சை மிளகாயை கடித்து ருசித்து சாப்பிட்டாள். மதியத்துக்கு சட்டியில் மீந்து போன கூழை தூக்கு சட்டியில் போட்டு கொண்டாள்.கிழவியிடம் சொல்லி விட்டு வெளியே வந்து கூரையில் சாய்த்து வைத்திருந்த தொரட்டுக் கோலை ஒரு கையிலும் மறுகையில் தூக்கு சட்டியும் கைத் துண்டுமாக வேலிக்குள் அடைத்திருந்த ஆடுகளை வெளியே ஒட்டியபடி மேய்ச்சலுக்கு கிளம்பினாள் வெலாம்பட்டு வீராயி.‘தலே எய்த்து எப்படி எய்திருக்கோ அதுவே தான் நடக்கும்.’ கெழவி அடிக்கடி சொல்லி கேட்டிருக்கும் வீராயிக்கும் இம்மியும் பிசகாமல் அதே கதை தான் நடந்தது..தெனமும் சாராயமும் கள்ளுமாக மாஞ்சி மாஞ்சி குடிச்சி சீரழிஞ்சி போன அப்பனையும், சூளையில் கூலி வேலைக்கு போய் பொட்டப் புள்ளையை காபுந்தா வளர்க்க எத்தனித்த ஆத்தாளையும் செங்கல் லாரி விபத்தில் இழக்க நேரிட்டது அவளுக்கு நேர்ந்த கொடிய நெலமை. சின்னஞ்சிறு வயசிலேயே போக்கிடம் இல்லாமல் நிர்க்கதியாக நின்னவளை குப்பத்தா பாட்டி தான் வேளாவேளைக்கு கஞ்சி ஊத்தி ஆதரவாக இருந்து பெரிய மனுஷியாக்கினாள். அதுமட்டுமா? காலாகாலத்தில் கலியாணத்திற்கும் ஏற்பாடுகள் செஞ்சிருந்தா. பொல்லாத விதிக்கு தான் எத்தனை நிறங்கள். இவள் மீது எத்துனை வன்மம். புள்ள வீட்ல ஏதோ எழவு விழுந்த காரணத்தால் வைபவம் தடைப் பட்டதை நெனச்சு மனசு தாங்க முடியாத அவள் விசும்பி விசும்பி ராத்திரி பூரா அய்து தீர்த்தாள். பொறவு ஒரு முடிவுக்கு வந்தவள் இனிமேல் எவனுக்கும் கழுத்த நீட்டி வாழ்க்கப் படாமல் முதிர் கன்னியாகவே இருப்பது என்று தீர்மானித்தது தான் பெரும் ரோதனை.நல்ல வாழ்க்கையை கொடுத்து வைக்க மனசில்லா கடவுளுக்கு வயித்துப் பாட்டுக்கும் ஏதும் வழி செய்யாததை நினைத்து தான் தெனந்தெனம் சங்கடப்பட்டாள். செங்கல் சூளை தெனக்கூலிக்கு போய் வயித்த கழுவப் பார்த்தாள் ஏதும் தோதுபடலை. வாங்கும் கூலியை விட அவளது வனப்பு மேல் விழுந்த வக்கிரமான பார்வைகள், கேள்விகள் சல்லடையாக துளைத்த போது தான் துடிதுடித்து போனாள். அதட்டி கேக்க வக்கத்தவளாய் வெறுப்பை வெளிக்காட்ட வெறுமனே காறித்துப்பி விட்டு வந்து விட்டாள். கயில வராத நெலையில வேறென்ன செய்ய முடியும் அவளாலே.மூணு வருஷத்துக்கு முன்னாடி அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் தேர்வு குழு மூலமாக முதிர் கன்னி தகுதி அடிப்படையில் கிடைத்த நான்கு செம்மறி ஆடுகள் வளர்ந்து இப்போது இருபது உருவாக பெருகி இருக்கிறது. அதற்காக அவள் பட்ட பாடு அவள் மீது வீழ்ந்த நெருப்பு வார்த்தைகள் அந்த ஊர் பஞ்சாயத்துக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே வெளிச்சம்.தெரிவு செய்யப்பட்ட பட்டியல் வெவரங்கள் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் வைப்பதற்கு முன் அதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருந்தது. ஊர் பஞ்சாயத்து கிளார்க்கிடம் மனு கொடுக்கும் போதே பிர்ச்சனை லேசாக தலை தூக்கியது.மாட்டு டாக்டர் கிட்ட ஆடுமாடு ஏதுமில்லைன்னு சர்டிஃபிகேட் வாங்கியது, விஎஓ கிட்டே ஒரு ஏக்கருக்கு மேல் நெலம் இல்லைன்னு சர்டிஃபிகேட் வாங்கியது, வருமானச் சான்று, சாதிச் சான்று, எல்லாம் முடித்து கடைசியில் பஞ்சாயத்து தலைவரை கொஞ்சம் சரி கட்டியது.. அதான் கெடைக்கிற ஆட்டிலே நாலிலே ஒறு பங்கு. ‘நாசமா போனவங்க..நாதாரிங்க’ வேற வழியோ நாதியோ இல்லாம ஒரு வழியாக வாங்கியாச்சு. இதிலே தலைவரு ஆட்டை வேற சேர்த்து மேய்க்கனும் அதிலே போட்ற குட்டிலே மூன்ல ஒன்னு தரதா எழுதப் படாத வர்க்க ரீதியான சட்டம்.உச்சி வெயில் தலைக்கு எறங்க ஆரம்பித்தது. கொர்ர ஆடுகள் காய்ந்த இலை சருகுகள் ஒட்டியிருந்த முட்புதர்களில் வாயில் நுரைத் தள்ள அலசி அலசி மேய்ந்து கொண்டிருந்தது. இடைச் செருகலாக இருந்த இரண்டு வெள்ளாட்டு குட்டிகளுக்கு கையிலிருந்த தொரட்டு மூலம் தழைகளை அறுத்து போட்டு அதுகள் இரண்டும் தீனி தின்னும் அழகை ரசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் வேர்த்து விறுவித்து வந்து சேர்ந்தான் வீங்கையன்.“ஏன்னே இம்புட்டு வேகா வெய்யிலே அரக்கபரக்க ஓடீயார்ரே”“ஆடுகளை மீசை மாசானம் கொல்லையிலே வுட்டுட்டு வந்தேன் ஒங்கிட்ட ஒரு சேதியை சொல்லிட்டு சுருக்கா போலாம்னு தான்” சொல்லி விட்டு நீளமாய் மூச்சிறைக்க அருகிலுள்ள பூவரச மரத்திற்கு கீழிருந்த கல்லில் கால் நீட்டி ஒக்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.“இந்தான்னே தண்ணீர் குடீங்க” குடுவையில் இருந்த தண்ணீரை வீராயி குடுத்ததும் ஒரு மிடறு குடிக்க தேவலாம் போலிருந்தது வீங்கையனுக்கு.“ இன்னிக்கு ராவுக்கு கொட்டாரப்பட்டி மிலிட்டரிகார் வாசுதேவப்பிள்ளை நெலத்தில கடா மடக்குறாங்க பொய்து சாயும் போது ஒன்னோட உருப்படியையும் ஓட்டியாந்து வுட்டுடு”“செரின்னா ஆட்டை வுட்டுட்டு நா கெளம்பிடுவேன் கெய்வி ஒத்தையா அல்லல் படும்.”“இருந்து ராவு சாப்பாடு கறிஞ்சோறு வவுறு நெறைய சாப்ட்டு போ மத்தது ஒம் பாடு..” தகவல் சொல்லி விட்டு சிறிது நேரத்தில் வந்த வழியே கிளம்பி விட்டான் வீங்கையன்.வீராயி சவகாசம் வெச்சிருந்த குறிப்பிட்ட சனங்களில் அவனும் ஒருத்தன். அவளைப் போலவே தெனமும் அறுபது உருப்படிகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வாழ்க்கை நகர்த்துபவன். கலியானமாகி பொன்ஜாதியோட ரெண்டு பொட்ட புள்ளைங்க வாய்க்க ரவுசான குடும்பஸ்தன். பரோபகார கொணம்.அவளுக்கு ஆத்திர அவசரத்திற்கு ஒத்தாசை செய்யும் கூடபொறக்காத பொறப்பு.நடுஉச்சிக்கு வந்த சூரியன் மேற்கு திசையில் மெல்ல நகரத் துவங்கியது. வெட்ட வெளியில் ஊசியாய் குத்திய வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ஆடுகள் உலர்ந்த தழைச் சத்துக்களை கலைந்து பசும் புற்களை தேடி தேடி மேய்ந்து கொண்டிருந்து. சென்ற தடவை நடந்த ராவு கிடா மடக்கும் பழைய நிகழ்வுகள் அவளுக்கு நினைவுகளாக நிழலாடியது…அன்று பொழுது சாய்ந்து பறவைகள் அதனதன் கூட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. நிலா வெளிச்சம் மேகக் குவியலை விலக்கி மெதுவாக எட்டிப் பார்த்த அந்தி நேரத்தில் ஆடுகள் மந்தை மந்தையாய் சோழவரம் நாமக்காரர் வரதன் நெலத்திற்கு வரத் தொடங்கின. தோராயமாக நானூறு உருப்படிகளுக்கு கொறையாமல் இருக்கும். வண்ணாங்குளம், திப்பைமேடு, துத்திக்காடு, செதுக்கம்பாடி, வேப்பம்பட்டு மற்றும் வெலாம்பட்டு என்று எல்லா பகுதிகளிலும் இருந்தும் கிடாக்கள் மந்தை மந்தையாக முன்னும் பின்னுமா வந்து ஒரே கூட்டமாக சேர்ந்தன. தற்காலிக பட்டி போடப்பட்டு காபந்துக்கு ரெண்டு ஆள் போடப் பட்டது. அப்புறமென்ன அந்த பகுதியில் ஆடு ஓட்டி வந்தவர்களின் அளம்பல் தான். நாலைந்து பேர்கள் கூட்டமாக சேர்ந்து தெரிந்தும் தெரியாமலும் நாட்டு சாராயமும் பீடியும் சுருட்டையும் முடித்தனர். பொறவு மற்றவர்களுடன் சேர்ந்து கிடா மடக்கும் நிலத்து சொந்தகாரர் வீட்டில் சமைத்த கறிச்சோற்றை வயிறு புடைக்க பாத்தி கட்டினர். எல்லாம் முடித்து வெத்திலை பாக்கு, பொகையிலை, மூக்கு பொடி போட்ட படியே காலி திண்ணையில் உட்கார்ந்து ஊர் கதை பேசி வம்பளந்தனர். அப்படியே தரையில் சாய்ந்து கிடந்து அன்றைய ராப்பொழுதைக் கழித்தார்கள். வீராயி மட்டும் பொட்டச்சி தனியாக தனக்கு உரிய சோத்தையும் கறிக்குழம்பையும் அலுமினிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு குடிசைக்கு திரும்பினாள்.வரும் போது வழியில் இருட்டில் ஏதோ மங்கலான உருவம் தொடர்ந்து வருவது போல பய உணர்வு தொற்றிக் கொள்ள சரசரவென்று உலர்ந்த இலை சருகுகள் காலடியில் மிதிபடும் சலசலப்பு வேறு பீதியை கிளப்பியது. விறுவிறுவென ஓட்டமும் நடையுமாக வந்து குடிசைக்குள் நுழைந்த போது முகம் முழுவதும் வேர்த்து ஊத்தியது மொகத்தை முந்தானையால் ஒத்தியெடுத்தாள். எடுத்து வந்த சோத்து பாத்திரத்தை தரையில் வைத்து விட்டு நிமிரும் போது தான் மெலிந்த உருவமாக மாசி குடிசைக்குள் தள்ளாடிய படியே திடீரென்று நுழைந்தான். குப்பென்று சாராயமும் பீடியும் கலந்த நாத்தம் வயிற்றை குமட்டியது.“ஏன்டி வீராழி கடா மடக்கிட்டு வர்ரீயே என்னய்யும் கொஞ்சம் மடக்கேன்” போதையில் மாசியின் நாக்கு உளறின.“இது செரியில்லே மரியாதையா வெளிய்ய போயிடு” கோபத்தில் கொப்பளித்தாள்.“என்னெய்ய கலியாணம் தான் பண்ணிக்கல்ல..செரி வுடு..ஒறவு வெச்சிக்க இன்னாமே கஷ்டம்” குதர்க்கமாக கேட்க,“நீ பேசரது செரியில்ல பேசாம போய்டு இல்லன்னா தொடப்பகட்ட பிஞ்சிடும்” ஆத்திரமாக பேசிய அவளை அவன் விடுவதாயில்லை. கலியாண ஏற்பாடுகள் செய்து தடைப்பட்டு போன மாசியின் நோக்கு புரிந்து கொண்ட அவளும் விடுவதாக இல்லை. கடைசியில் கூப்பாடு போட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ஒரு போடு போட்டு வலுக்கட்டாயமாக அவனை வேளியே இழுத்துச் சென்று தள்ளியதை பார்க்க பாவமாத்தான் இருந்தது. அடுத்த நாள் காலையிலே கிடா மடக்கும் இடத்துக்கு போய் தனது உருப்படிகளை மத்தவங்க போல மேய்ச்சலுக்கு கொண்டு சென்றது… எல்லாமே இப்ப நடந்த மாதிரி இருந்தது.அருகிலிருந்த ஆலமரக் கிளையில் சிறகடித்த மரங்கொத்தி பறவைகளின் வித்தியாசமான குரல் கேட்ட போது தான் தன் சகஜ நிலைக்கு வந்தாள் வீராயி. கபகப வென்று எழுந்த பசி வயித்தை கிள்ளியது. காலையில் தூக்கு சட்டியில் கொண்டு வந்த கூழை ஊறுகாய் சேர்த்து குடித்து விட்டு மரத்தின் நிழலில் சற்று இளப்பாற அவளையும் மீறி கண்கள் அசந்தது தான் அன்றைய தினத்தின் அவளது கடைசி நிம்மதியாக இருந்தது.திருப்பதியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் அந்த ரயில் கண்ணமங்கலம் தாண்டி ஒண்ணுபுரம் ரயில்வே ஸ்டேஷனில் தடாலென்று நின்றது. வண்டியிலிருந்து இறங்கிய இஞ்சின் டிரைவர் அங்கிருந்த ரயில்வே கன்ட்ரோல் அலுவலரிடம் தண்டவாளத்திற்கு அருகில் குறிப்பிட்ட இடத்தில் நடந்த சம்பவத்தை விவரமான அறிக்கையாக தாக்கல் செய்தார். மறுபடியும் போகியில் ஏறி ‘கார்டு’ பச்சை கொடியை அசைத்து காட்டிய உடனே இன்ஜினை இயக்க ‘கூகூ’ என்ற கூக்குரலுடன் மெதுவாக ரயில் நகர்ந்து சென்ற பிறகு தான் பிரச்சனையே வேகமெடுத்தது.விவரம் அறிந்த ரயில்வே ஊழியரும், ரயில்வே பாதுகாப்பு போலீசாரும் துரிதமாக நேரடி கள ஆய்வு செய்ய கொங்கராம்பட்டு பகுதி தண்டவாளத்திற்கு அருகே குறிப்பிட்ட கிலோமீட்டர் இடத்தில் வந்து பார்த்த போது ஆடுகள் தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்த நிகழ்வுக்கான தடயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிந்ததும் மறுபடி அதை ஊர்ஜிதபடுத்த சம்மந்தப்பட்ட ஊர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் பொது மக்களிடம் விசாரணை செய்தும் துப்பு ஏதும் கிடைக்காததால் திரும்பி சென்று விட்டனர்.அவர்கள் வந்து போனதை சாக்காக வைத்து வீராயி என்ற அந்த ஏழைப் பெண்ணின் முதிர் கன்னி என்ற போர்வை மூர்க்கத்தனமாக விலக்கப் பட்டது. ஊர் பஞ்சாயத்து தலைவரின் யதேச்சதிகார நெருப்பில் அந்த பெண்ணின் கற்பும் கண்ணியமும் தீயிலிட்டு பொசுக்கப் பட்டது. சேதி கேட்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அடிப்பட்ட இரண்டு ஆடுகளை ஆட்களை வைத்து உடனடியாக அப்புறப்படுத்தி அருகிலிருந்த செங்கல் சூளையில் மறைத்து வைத்து ரயில்வே ஆட்களை போக்கு காட்டியதற்கு விலையாக அவள் இதுநாள் வரை கட்டிக் காத்த மானம் சூரையாடப் பட்டது.நடந்த அநியாயம் எதுவும் அறியாமல் அங்கே கொட்டாரப்பட்டியில் ராப்பொழுது கிடா மடக்கு விருந்துக்கு வந்த ஆட்டுக்காரர்கள் அனைவரும் வழக்கம் போல கறிஞ்சோறு சாப்பிட்டு கொண்டிருந்தனர் வீராயியைத் தவிர.

Published by thanjikumar

Airveteran, interested in Literature and reading books .

One thought on “ராப்பொழுது…-தஞ்சிகுமார்-காலையிலேயே கனன்று வீசிய கத்திரி வெயிலின் தீட்சண்யம் அப்படி ஒன்றும் வெக்கையாயில்லை வீராயிக்கு. பட்டியிலிருந்த ஆடுகளை வெளியே வலுக்கட்டாயமாக துரத்தி விட்டு தரையில் இருந்த ஆட்டு புழுக்கை மற்றும் செத்தைகளை வழக்கம் போல மொறத்தால் எடுத்து எட்டி மரத்தின் அருகிலிருந்த உரக்குழியில் கடாசினாள். தரையில் அங்குமிங்கும் வழிந்தோடும் ஆட்டு மூத்திரத்தை கட்ட தொடப்பத்தால் சுத்தப் படுத்திவிட்டு வெளியே வரும் போது ‘ம்மே ம்மே’ என்று இரை வேண்டிய ஆடுகளின் கூப்பாடு.பேக்கடைக்கு சென்று ராவு சாப்பிட்டு விட்டு தண்ணீரில் ஊறவைத்த சோத்து பல்லா, கொழம்பு சட்டி, கூழ் பானை, அகப்பை மற்றும் சாப்பாட்டு அலுமினியக் கிண்ணியை சாம்பலும் வைக்கோலுமாக போட்டு அழுந்த தேய்த்து சுத்தமாக கழுவி எதிரிலிருந்த பாறைக் கல்லில் கவித்து காய வைத்தாள்.காத தூரத்தில் இருந்த கெணத்தில் தண்ணீ சேந்தி வந்து பானையை ரொப்பினாள். பிறகு குடிசைக்குள் வந்தவள் மேலான்டை ஓரத்தில் ஈச்சம் பாயின் மேல் கிழிந்த பொடவையின் விரிப்பில் நீர் பட்ட கம்பளி பூச்சாக தேகம் சுருண்டு இருமலும் பொருமலாக கிடந்த குப்பத்தா கிழவியைப் பதுவுசாக சொல்லி எழுப்பி கைத்தாங்கலாக கொல்லைக்கு அழைத்து சென்று மறுபடி கூட்டி வந்து திண்ணை கட்டையில் உட்கார வைத்தாள். வெளியே வாசலில் சாணி தெளித்து கம்பி கோலம் போட்டாள். கைக் கால் அலம்பி கிழவிக்கு ஆகாரமாக சட்டியிலிருந்த கம்பங் கூழ் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாயை வாயிலே ஊட்டிய பிறகு பாட்டி தலைமுடியையும், சீலையையும் கொஞ்சம் சரிப்படுத்தினாள். ராவு சாப்பிட்டு மிச்சமிருந்த பழஞ்சோற்றுடன் பச்சை மிளகாயை கடித்து ருசித்து சாப்பிட்டாள். மதியத்துக்கு சட்டியில் மீந்து போன கூழை தூக்கு சட்டியில் போட்டு கொண்டாள்.கிழவியிடம் சொல்லி விட்டு வெளியே வந்து கூரையில் சாய்த்து வைத்திருந்த தொரட்டுக் கோலை ஒரு கையிலும் மறுகையில் தூக்கு சட்டியும் கைத் துண்டுமாக வேலிக்குள் அடைத்திருந்த ஆடுகளை வெளியே ஒட்டியபடி மேய்ச்சலுக்கு கிளம்பினாள் வெலாம்பட்டு வீராயி.‘தலே எய்த்து எப்படி எய்திருக்கோ அதுவே தான் நடக்கும்.’ கெழவி அடிக்கடி சொல்லி கேட்டிருக்கும் வீராயிக்கும் இம்மியும் பிசகாமல் அதே கதை தான் நடந்தது..தெனமும் சாராயமும் கள்ளுமாக மாஞ்சி மாஞ்சி குடிச்சி சீரழிஞ்சி போன அப்பனையும், சூளையில் கூலி வேலைக்கு போய் பொட்டப் புள்ளையை காபுந்தா வளர்க்க எத்தனித்த ஆத்தாளையும் செங்கல் லாரி விபத்தில் இழக்க நேரிட்டது அவளுக்கு நேர்ந்த கொடிய நெலமை. சின்னஞ்சிறு வயசிலேயே போக்கிடம் இல்லாமல் நிர்க்கதியாக நின்னவளை குப்பத்தா பாட்டி தான் வேளாவேளைக்கு கஞ்சி ஊத்தி ஆதரவாக இருந்து பெரிய மனுஷியாக்கினாள். அதுமட்டுமா? காலாகாலத்தில் கலியாணத்திற்கும் ஏற்பாடுகள் செஞ்சிருந்தா. பொல்லாத விதிக்கு தான் எத்தனை நிறங்கள். இவள் மீது எத்துனை வன்மம். புள்ள வீட்ல ஏதோ எழவு விழுந்த காரணத்தால் வைபவம் தடைப் பட்டதை நெனச்சு மனசு தாங்க முடியாத அவள் விசும்பி விசும்பி ராத்திரி பூரா அய்து தீர்த்தாள். பொறவு ஒரு முடிவுக்கு வந்தவள் இனிமேல் எவனுக்கும் கழுத்த நீட்டி வாழ்க்கப் படாமல் முதிர் கன்னியாகவே இருப்பது என்று தீர்மானித்தது தான் பெரும் ரோதனை.நல்ல வாழ்க்கையை கொடுத்து வைக்க மனசில்லா கடவுளுக்கு வயித்துப் பாட்டுக்கும் ஏதும் வழி செய்யாததை நினைத்து தான் தெனந்தெனம் சங்கடப்பட்டாள். செங்கல் சூளை தெனக்கூலிக்கு போய் வயித்த கழுவப் பார்த்தாள் ஏதும் தோதுபடலை. வாங்கும் கூலியை விட அவளது வனப்பு மேல் விழுந்த வக்கிரமான பார்வைகள், கேள்விகள் சல்லடையாக துளைத்த போது தான் துடிதுடித்து போனாள். அதட்டி கேக்க வக்கத்தவளாய் வெறுப்பை வெளிக்காட்ட வெறுமனே காறித்துப்பி விட்டு வந்து விட்டாள். கயில வராத நெலையில வேறென்ன செய்ய முடியும் அவளாலே.மூணு வருஷத்துக்கு முன்னாடி அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் தேர்வு குழு மூலமாக முதிர் கன்னி தகுதி அடிப்படையில் கிடைத்த நான்கு செம்மறி ஆடுகள் வளர்ந்து இப்போது இருபது உருவாக பெருகி இருக்கிறது. அதற்காக அவள் பட்ட பாடு அவள் மீது வீழ்ந்த நெருப்பு வார்த்தைகள் அந்த ஊர் பஞ்சாயத்துக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே வெளிச்சம்.தெரிவு செய்யப்பட்ட பட்டியல் வெவரங்கள் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் வைப்பதற்கு முன் அதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருந்தது. ஊர் பஞ்சாயத்து கிளார்க்கிடம் மனு கொடுக்கும் போதே பிர்ச்சனை லேசாக தலை தூக்கியது.மாட்டு டாக்டர் கிட்ட ஆடுமாடு ஏதுமில்லைன்னு சர்டிஃபிகேட் வாங்கியது, விஎஓ கிட்டே ஒரு ஏக்கருக்கு மேல் நெலம் இல்லைன்னு சர்டிஃபிகேட் வாங்கியது, வருமானச் சான்று, சாதிச் சான்று, எல்லாம் முடித்து கடைசியில் பஞ்சாயத்து தலைவரை கொஞ்சம் சரி கட்டியது.. அதான் கெடைக்கிற ஆட்டிலே நாலிலே ஒறு பங்கு. ‘நாசமா போனவங்க..நாதாரிங்க’ வேற வழியோ நாதியோ இல்லாம ஒரு வழியாக வாங்கியாச்சு. இதிலே தலைவரு ஆட்டை வேற சேர்த்து மேய்க்கனும் அதிலே போட்ற குட்டிலே மூன்ல ஒன்னு தரதா எழுதப் படாத வர்க்க ரீதியான சட்டம்.உச்சி வெயில் தலைக்கு எறங்க ஆரம்பித்தது. கொர்ர ஆடுகள் காய்ந்த இலை சருகுகள் ஒட்டியிருந்த முட்புதர்களில் வாயில் நுரைத் தள்ள அலசி அலசி மேய்ந்து கொண்டிருந்தது. இடைச் செருகலாக இருந்த இரண்டு வெள்ளாட்டு குட்டிகளுக்கு கையிலிருந்த தொரட்டு மூலம் தழைகளை அறுத்து போட்டு அதுகள் இரண்டும் தீனி தின்னும் அழகை ரசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் வேர்த்து விறுவித்து வந்து சேர்ந்தான் வீங்கையன்.“ஏன்னே இம்புட்டு வேகா வெய்யிலே அரக்கபரக்க ஓடீயார்ரே”“ஆடுகளை மீசை மாசானம் கொல்லையிலே வுட்டுட்டு வந்தேன் ஒங்கிட்ட ஒரு சேதியை சொல்லிட்டு சுருக்கா போலாம்னு தான்” சொல்லி விட்டு நீளமாய் மூச்சிறைக்க அருகிலுள்ள பூவரச மரத்திற்கு கீழிருந்த கல்லில் கால் நீட்டி ஒக்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.“இந்தான்னே தண்ணீர் குடீங்க” குடுவையில் இருந்த தண்ணீரை வீராயி குடுத்ததும் ஒரு மிடறு குடிக்க தேவலாம் போலிருந்தது வீங்கையனுக்கு.“ இன்னிக்கு ராவுக்கு கொட்டாரப்பட்டி மிலிட்டரிகார் வாசுதேவப்பிள்ளை நெலத்தில கடா மடக்குறாங்க பொய்து சாயும் போது ஒன்னோட உருப்படியையும் ஓட்டியாந்து வுட்டுடு”“செரின்னா ஆட்டை வுட்டுட்டு நா கெளம்பிடுவேன் கெய்வி ஒத்தையா அல்லல் படும்.”“இருந்து ராவு சாப்பாடு கறிஞ்சோறு வவுறு நெறைய சாப்ட்டு போ மத்தது ஒம் பாடு..” தகவல் சொல்லி விட்டு சிறிது நேரத்தில் வந்த வழியே கிளம்பி விட்டான் வீங்கையன்.வீராயி சவகாசம் வெச்சிருந்த குறிப்பிட்ட சனங்களில் அவனும் ஒருத்தன். அவளைப் போலவே தெனமும் அறுபது உருப்படிகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வாழ்க்கை நகர்த்துபவன். கலியானமாகி பொன்ஜாதியோட ரெண்டு பொட்ட புள்ளைங்க வாய்க்க ரவுசான குடும்பஸ்தன். பரோபகார கொணம்.அவளுக்கு ஆத்திர அவசரத்திற்கு ஒத்தாசை செய்யும் கூடபொறக்காத பொறப்பு.நடுஉச்சிக்கு வந்த சூரியன் மேற்கு திசையில் மெல்ல நகரத் துவங்கியது. வெட்ட வெளியில் ஊசியாய் குத்திய வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ஆடுகள் உலர்ந்த தழைச் சத்துக்களை கலைந்து பசும் புற்களை தேடி தேடி மேய்ந்து கொண்டிருந்து. சென்ற தடவை நடந்த ராவு கிடா மடக்கும் பழைய நிகழ்வுகள் அவளுக்கு நினைவுகளாக நிழலாடியது…அன்று பொழுது சாய்ந்து பறவைகள் அதனதன் கூட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. நிலா வெளிச்சம் மேகக் குவியலை விலக்கி மெதுவாக எட்டிப் பார்த்த அந்தி நேரத்தில் ஆடுகள் மந்தை மந்தையாய் சோழவரம் நாமக்காரர் வரதன் நெலத்திற்கு வரத் தொடங்கின. தோராயமாக நானூறு உருப்படிகளுக்கு கொறையாமல் இருக்கும். வண்ணாங்குளம், திப்பைமேடு, துத்திக்காடு, செதுக்கம்பாடி, வேப்பம்பட்டு மற்றும் வெலாம்பட்டு என்று எல்லா பகுதிகளிலும் இருந்தும் கிடாக்கள் மந்தை மந்தையாக முன்னும் பின்னுமா வந்து ஒரே கூட்டமாக சேர்ந்தன. தற்காலிக பட்டி போடப்பட்டு காபந்துக்கு ரெண்டு ஆள் போடப் பட்டது. அப்புறமென்ன அந்த பகுதியில் ஆடு ஓட்டி வந்தவர்களின் அளம்பல் தான். நாலைந்து பேர்கள் கூட்டமாக சேர்ந்து தெரிந்தும் தெரியாமலும் நாட்டு சாராயமும் பீடியும் சுருட்டையும் முடித்தனர். பொறவு மற்றவர்களுடன் சேர்ந்து கிடா மடக்கும் நிலத்து சொந்தகாரர் வீட்டில் சமைத்த கறிச்சோற்றை வயிறு புடைக்க பாத்தி கட்டினர். எல்லாம் முடித்து வெத்திலை பாக்கு, பொகையிலை, மூக்கு பொடி போட்ட படியே காலி திண்ணையில் உட்கார்ந்து ஊர் கதை பேசி வம்பளந்தனர். அப்படியே தரையில் சாய்ந்து கிடந்து அன்றைய ராப்பொழுதைக் கழித்தார்கள். வீராயி மட்டும் பொட்டச்சி தனியாக தனக்கு உரிய சோத்தையும் கறிக்குழம்பையும் அலுமினிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு குடிசைக்கு திரும்பினாள்.வரும் போது வழியில் இருட்டில் ஏதோ மங்கலான உருவம் தொடர்ந்து வருவது போல பய உணர்வு தொற்றிக் கொள்ள சரசரவென்று உலர்ந்த இலை சருகுகள் காலடியில் மிதிபடும் சலசலப்பு வேறு பீதியை கிளப்பியது. விறுவிறுவென ஓட்டமும் நடையுமாக வந்து குடிசைக்குள் நுழைந்த போது முகம் முழுவதும் வேர்த்து ஊத்தியது மொகத்தை முந்தானையால் ஒத்தியெடுத்தாள். எடுத்து வந்த சோத்து பாத்திரத்தை தரையில் வைத்து விட்டு நிமிரும் போது தான் மெலிந்த உருவமாக மாசி குடிசைக்குள் தள்ளாடிய படியே திடீரென்று நுழைந்தான். குப்பென்று சாராயமும் பீடியும் கலந்த நாத்தம் வயிற்றை குமட்டியது.“ஏன்டி வீராழி கடா மடக்கிட்டு வர்ரீயே என்னய்யும் கொஞ்சம் மடக்கேன்” போதையில் மாசியின் நாக்கு உளறின.“இது செரியில்லே மரியாதையா வெளிய்ய போயிடு” கோபத்தில் கொப்பளித்தாள்.“என்னெய்ய கலியாணம் தான் பண்ணிக்கல்ல..செரி வுடு..ஒறவு வெச்சிக்க இன்னாமே கஷ்டம்” குதர்க்கமாக கேட்க,“நீ பேசரது செரியில்ல பேசாம போய்டு இல்லன்னா தொடப்பகட்ட பிஞ்சிடும்” ஆத்திரமாக பேசிய அவளை அவன் விடுவதாயில்லை. கலியாண ஏற்பாடுகள் செய்து தடைப்பட்டு போன மாசியின் நோக்கு புரிந்து கொண்ட அவளும் விடுவதாக இல்லை. கடைசியில் கூப்பாடு போட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ஒரு போடு போட்டு வலுக்கட்டாயமாக அவனை வேளியே இழுத்துச் சென்று தள்ளியதை பார்க்க பாவமாத்தான் இருந்தது. அடுத்த நாள் காலையிலே கிடா மடக்கும் இடத்துக்கு போய் தனது உருப்படிகளை மத்தவங்க போல மேய்ச்சலுக்கு கொண்டு சென்றது… எல்லாமே இப்ப நடந்த மாதிரி இருந்தது.அருகிலிருந்த ஆலமரக் கிளையில் சிறகடித்த மரங்கொத்தி பறவைகளின் வித்தியாசமான குரல் கேட்ட போது தான் தன் சகஜ நிலைக்கு வந்தாள் வீராயி. கபகப வென்று எழுந்த பசி வயித்தை கிள்ளியது. காலையில் தூக்கு சட்டியில் கொண்டு வந்த கூழை ஊறுகாய் சேர்த்து குடித்து விட்டு மரத்தின் நிழலில் சற்று இளப்பாற அவளையும் மீறி கண்கள் அசந்தது தான் அன்றைய தினத்தின் அவளது கடைசி நிம்மதியாக இருந்தது.திருப்பதியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் அந்த ரயில் கண்ணமங்கலம் தாண்டி ஒண்ணுபுரம் ரயில்வே ஸ்டேஷனில் தடாலென்று நின்றது. வண்டியிலிருந்து இறங்கிய இஞ்சின் டிரைவர் அங்கிருந்த ரயில்வே கன்ட்ரோல் அலுவலரிடம் தண்டவாளத்திற்கு அருகில் குறிப்பிட்ட இடத்தில் நடந்த சம்பவத்தை விவரமான அறிக்கையாக தாக்கல் செய்தார். மறுபடியும் போகியில் ஏறி ‘கார்டு’ பச்சை கொடியை அசைத்து காட்டிய உடனே இன்ஜினை இயக்க ‘கூகூ’ என்ற கூக்குரலுடன் மெதுவாக ரயில் நகர்ந்து சென்ற பிறகு தான் பிரச்சனையே வேகமெடுத்தது.விவரம் அறிந்த ரயில்வே ஊழியரும், ரயில்வே பாதுகாப்பு போலீசாரும் துரிதமாக நேரடி கள ஆய்வு செய்ய கொங்கராம்பட்டு பகுதி தண்டவாளத்திற்கு அருகே குறிப்பிட்ட கிலோமீட்டர் இடத்தில் வந்து பார்த்த போது ஆடுகள் தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்த நிகழ்வுக்கான தடயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிந்ததும் மறுபடி அதை ஊர்ஜிதபடுத்த சம்மந்தப்பட்ட ஊர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் பொது மக்களிடம் விசாரணை செய்தும் துப்பு ஏதும் கிடைக்காததால் திரும்பி சென்று விட்டனர்.அவர்கள் வந்து போனதை சாக்காக வைத்து வீராயி என்ற அந்த ஏழைப் பெண்ணின் முதிர் கன்னி என்ற போர்வை மூர்க்கத்தனமாக விலக்கப் பட்டது. ஊர் பஞ்சாயத்து தலைவரின் யதேச்சதிகார நெருப்பில் அந்த பெண்ணின் கற்பும் கண்ணியமும் தீயிலிட்டு பொசுக்கப் பட்டது. சேதி கேட்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அடிப்பட்ட இரண்டு ஆடுகளை ஆட்களை வைத்து உடனடியாக அப்புறப்படுத்தி அருகிலிருந்த செங்கல் சூளையில் மறைத்து வைத்து ரயில்வே ஆட்களை போக்கு காட்டியதற்கு விலையாக அவள் இதுநாள் வரை கட்டிக் காத்த மானம் சூரையாடப் பட்டது.நடந்த அநியாயம் எதுவும் அறியாமல் அங்கே கொட்டாரப்பட்டியில் ராப்பொழுது கிடா மடக்கு விருந்துக்கு வந்த ஆட்டுக்காரர்கள் அனைவரும் வழக்கம் போல கறிஞ்சோறு சாப்பிட்டு கொண்டிருந்தனர் வீராயியைத் தவிர.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: